இந்த வார விசேஷங்கள்: 14-5-2024 முதல் 20-5-2024 வரை
|தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இந்த வாரத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்.
14-ந் தேதி (செவ்வாய்)
* சமயபுரம் மாரியம்மன் பஞ்சபிரகார விழா.
* திருமோகூர் காளமேகப் பெருமாள் உற்சவம்.
* சிவகாசி விசுவநாதர் காலை பூச்சப்பரத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் பவனி.
* திருவாடானை ஆதிரத்தினேசுவரர் பல்லக்கில் வீதி உலா.
* மேல்நோக்கு நாள்.
15-ந் தேதி (புதன்)
* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
* நயினார்கோவில் நாகநாதர் காலை இந்திர விமானத்திலும், இரவு பூத வாகனத்திலும் பவனி.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள். காலை சந்திர பிரபையிலும், இரவு சூரிய பிரபையிலும் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
16-ந் தேதி (வியாழன்)
* காரைக்குடி கொப்புடையம்மன் தெப்ப உற்சவம், இரவு புஷ்பப்பல்லக்கில் புறப்பாடு.
* காளையார்கோவில் அம்மன் தபசுக் காட்சி.
* திருமோகூர் காளமேகப் பெருமாள் அனுமன் வாகனத்தில் புறப்பாடு.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் தங்க திருப்புளி வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
17-ந் தேதி (வெள்ளி)
* ஆழ்வார்திருநகரியில் ஒன்பது கருட சேவை.
* பழனி பாலதண்டாயுதபாணி தங்க மயில் வாகனத்தில் பவனி.
* மதுரை கூடலழகர் காலை பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.
* திருப்பத்தூர் திருத்தணி நாதர் திருக்கல்யாணம்.
* அரியக்குடி சீனிவாசப் பெருமாள், வெள்ளி அனுமன் வாகனத்தில் வீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.
18-ந் தேதி (சனி)
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் இரவு தங்க கருட வாகனத்தில் பவனி.
* நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் காலை பல்லக்கிலும், இரவு அன்ன வாகனத்திலும் புறப்பாடு.
* மதுரை அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி கோவிலில் பால்குடம் மற்றும் பூக்குழி விழா.
* மேல்நோக்கு நாள்.
19-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* காஞ்சி குமரக்கோட்டை முருகப்பெருமான் ரத உற்சவம்.
* திருப்புகழுர் அக்னீசுவரர் வெள்ளி விருட்சப சேவை.
* காட்டுபருவூர் ஆதிகேசவப்பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.
* சமநோக்கு நாள்.
20-ந் தேதி (திங்கள்)
* பிரதோஷம்.
* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்.
* திருமோகூர் காளமேகப் பெருமாள் வைர சப்பரத்தில் பவனி.
* நாங்குநேரி ராஜாக்கள் மங்கலம் பெருவேம்புடையார் தர்ம சாஸ்தா வருசாபிஷேகம்.
* சமநோக்கு நாள்.