< Back
ஆன்மிகம்
இந்த வார விசேஷங்கள்: 30-4-2024 முதல் 6-5-2024 வரை
ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 30-4-2024 முதல் 6-5-2024 வரை

தினத்தந்தி
|
30 April 2024 11:03 AM IST

மே 2-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

30-ந் தேதி (செவ்வாய்)

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.

* வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி

* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* மேல்நோக்கு நாள்.

1-ந் தேதி (புதன்)

* திருநெல்வேலி திருவேங்கடமுடையான் சன்னிதியில் ரத உற்சவம்.

*சென்னை கேசவப்பெருமாள் தங்கப்பல்லக்கில் பவனி.

* திருவரங்கம் நம்பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.

* திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

2-ந் தேதி (வியாழன்)

* திருவரங்கம் நம்பெருமாள் சன்னிதியில் நான்கு கருட சேவை.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

*மேல்நோக்கு நாள்.

3-ந் தேதி (வெள்ளி)

* முகூர்த்த நாள்.

* அக்னி நட்சத்திரம் தொடக்கம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் திருவிளையாடல்.

* வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

* மேல்நோக்கு நாள்.

4-ந் தேதி (சனி)

* சர்வ ஏகாதசி.

* சென்னை கேசவப்பெருமாள் விடையாற்று உற்சவம்.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

5-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* திருவைகுண்டம் வைகுண்டபதி திருவீதி உலா.

* திருவரங்கம் நம்பெருமாள் வண்டலூர் சப்பரத்தில் புறப்பாடு.

* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

* மேல்நோக்கு நாள்.

6-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிசேகம்.

* சமநோக்கு நாள்.

மேலும் செய்திகள்