இந்த வார விசேஷங்கள்: 2-4-2024 முதல் 8-4-2024 வரை
|வரும் ஞாயிற்றுக்கிழமை சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவம். கேடய சப்பரத்தில் அம்மன் பவனி.
2-ந் தேதி (செவ்வாய்)
* தென்திருப்பேரை பெருமாள் ரத உற்சவம்.
* ஒழுகைமங்கலம் மாரியம்மன் புஷ்பப்படி சட்டத்தில் புறப்பாடு.
* தொட்டியம் காளியம்மன் ரத உற்சவம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.
3-ந் தேதி (புதன்)
* சென்னை மல்லீசுவரர் விடையாற்று உற்சவம்.
* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்க குதிரை வாகனத்திலும் புறப்பாடு.
* கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் விழா தொடக்கம்.
* தாயமங்கலம் முத்து மாரியம்மன் பூத வாகனத்தில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
4-ந் தேதி (வியாழன்)
* மன்னார்குடி ராஜகோ பாலசுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.
5-ந் தேதி (வெள்ளி)
* சர்வ ஏகாதசி.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சப்தாவர்ணம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
6-ந் தேதி (சனி)
* பிரதோஷம். மன்னார்குடி ராஜகோபால சுவாமி வெள்ளி சேஷ வாகனத்தில் புறப்பாடு.
* பாபநாசம் பாபநாசநாதர் ஏக சிம்மாசனத்திலும், இரவு பர்வதவர்த்தன வாகனத்திலும் வீதி உலா.
* கரிவலம்வந்தநல்லூர் அம்பாள் விருட்சபவாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
7-ந் தேதி (ஞாயிறு)
* சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவம். கேடய சப்பரத்தில் அம்மன் பவனி.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி வைரமுடி சேவை.
* தாயமங்கலம் முத்து மாரி அம்மன் புஷ்ப சப்பரத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
8-ந் தேதி (திங்கள்)
* அமாவாசை.
* சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
* பாபநாசம் பாபநாசநாதர் வெள்ளி விருட்சப சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.