< Back
ஆன்மிகம்
இந்த வார விசேஷங்கள்: 27-2-2024 முதல் 4-3-2024 வரை
ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 27-2-2024 முதல் 4-3-2024 வரை

தினத்தந்தி
|
27 Feb 2024 11:15 AM IST

மார்ச் 1-ம் தேதி ராமேசுவரம் ராமநாதர் கோவில் விழா தொடக்கம், இரவு சுவாமி தங்க நந்தி வாகனத்தில் பவனி.

27-ந் தேதி (செவ்வாய்)

* கோயம்புத்தூர் கோனியம்மன் திருக்கல்யாணம், இரவு மகிஷாசூர சம்ஹார லீலை, பூத வாகனத்தில் அம்மன் புறப்பாடு.

* நத்தம் மாரியம்மன் பொங்கல் பெருவிழா, மாலை பூக்குழி விழா.

* காங்கேயம் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* சமநோக்கு நாள்.

28-ந் தேதி (புதன்)

* கோயம்புத்தூர் கோனியம்மன் கோவிலில் ரத உற்சவம்.

* நத்தம் மாரியம்மன் புஷ்பப் பல்லக்கு.

* திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

* சமநோக்கு நாள்.

29-ந் தேதி (வியாழன்)

* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாஞ்சலி சேவை.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

* சமநோக்கு நாள்.

1-ந் தேதி (வெள்ளி)

* முகூர்த்த நாள்.

* ராமேசுவரம் ராமநாதர் கோவில் விழா தொடக்கம், இரவு சுவாமி தங்க நந்தி வாகனத்தில் பவனி.

* காங்கேயம் முருகப்பெருமான் லட்ச தீப காட்சி.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* சமநோக்கு நாள்.

2-ந் தேதி (சனி)

* கோயம்புத்தூர் கோனியம்மன் தீர்த்தவாரி, யாளி வாகனத்தில் பவனி.

* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், மதுரை கூடலழகர் கோவில்களில் திருமஞ்சன சேவை.

* கீழ்நோக்கு நாள்.

3-ந் தேதி (ஞாயிறு)

* ராமேசுவரம் ராமநாத சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் பவனி.

* வாடிப்பட்டி குலசேகரன்கோட்டை மீனாட்சி கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்.

* ராமநாதபுரம் முத்தாலம்மன் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

4-ந் தேதி (திங்கள்)

* ராமேசுவரம் ராமநாத சுவாமி வெள்ளி கயிலாய வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் பவனி.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சனம்.

* சமநோக்கு நாள்.

மேலும் செய்திகள்