< Back
ஆன்மிகம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்
ஆன்மிகம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்

தினத்தந்தி
|
1 Aug 2022 4:31 AM GMT

அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

மயிலாடுதுறை:

தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

பல்வேறு தலபெருமைகளை உடைய இந்த கோவிலில் அபிராமி அம்மன் ஆடிப்பூர மகோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. 10 நாள் உற்ச்சவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டம் நடைபெற்றது.

அபிராமி அம்மன் வெள்ளி அலங்காரத்தில் விநாயகர் சண்டிகேஸ்வரருடன் தேரில் எழுந்தருளி மகாதீபாரதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது.

கோவிலை சுற்றி நான்கு ரத வீதிகளில் அபிராமி அம்மன் எழுந்தருளிய தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. வீடுகள் தோறும் தீபாரதனை, அர்ச்சனை செய்து குடியிருப்பு வாசிகள் வழிபாடு செய்தனர்.

மேலும் செய்திகள்