< Back
ஆன்மிகம்

ஆன்மிகம்
சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா

5 Aug 2024 2:08 PM IST
ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் கோமரத்தாடிகள் பங்கேற்ற பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த மாதம் 22-ம் தேதி கோவில் கால்நாட்டுதல் நிகழ்ச்சியுடன் அமாவாசை திருவிழா தொடங்கி, தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோவிலுக்கு வந்த பக்தர்கள், தாமிரபரணி நதியில் புனித நீராடி அதன்பின்னர் வழிபாட்டை தொடங்கினர். பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், செருப்பு காணிக்கையிடுதல், மொட்டையடித்தல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். கோவில் கோமரத்தாடிகள் பங்கேற்ற பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது.