< Back
ஆன்மிகம்
வாரம் ஒரு திருமந்திரம்
ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

தினத்தந்தி
|
6 Dec 2022 9:51 AM IST

திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

திருமூலரால் இயற்றப்பட்ட திருமந்திர நூலில், சிவபெருமான் எப்படிப்பட்டவர், அவர் அருளாட்சி செய்யும் இடங்கள், அவரை உணர்வது எப்படி என்பது போன்றவற்றை எல்லாம் சொல்லியிருக்கிறார். சைவ நெறிகளுக்கு ஈடாக வைத்து போற்றப்படும் திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

அன்று நின்றான் கிடந்தான் அவன் என்று

சென்று நின்று எண்திசை ஏத்துவர் தேவர்கள்

என்று நின்று ஏத்துவன் எம்பெருமான்தனை

ஒன்றியென் உள்ளத்தின் உள் இருந்தானே.

விளக்கம்:-

பன்னெடுங்காலமாக உயிர்கள் அனைத்திற்கும் புலப்படும் வகையில் அங்கும், இங்கும் இருந்து அருள் செய்த இறைவன், உயிர்கள் தொழுமாறு ஓரிடத்தில் இருந்தும் அருள்புரிகிறார். அந்தப் பரம்பொருள், எட்டு திசைகளிலும் இருப்பதாக தேவர்கள் போற்றுவார்கள். இவ்வாறு உலகெங்கும், திசையெங்கும் இருக்கும் சிவபெருமான், என் உள்ளத்தின் உள்ளேயும் இருந்தார்.

மேலும் செய்திகள்