< Back
ஆன்மிகம்
வாரம் ஒரு திருமந்திரம்
ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

தினத்தந்தி
|
8 Nov 2022 7:17 AM IST

திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

திருமூலரால் இயற்றப்பட்ட திருமந்திர நூலானது, சைவ நெறிகளுக்கு நிகராக வைத்து போற்றப்படுகிறது. இந்த நூல், 3 ஆயிரம் பாடல்களால் ஆனது. இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு

உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம்இறை

உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு

உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே.

விளக்கம்:-

எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை, உள்ளத்திலும் இருக்கிறார், உள்ளத்திற்கு வெளியேயும் இருக்கிறார் என்று உணர்ந்தவர்களுக்கு, அவ்வாறே இருக்கிறார். இறைவனான சிவபெருமான், உள்ளத்திலும் இல்லை, வெளியேயும் இல்லை என்று கருதுபவர்களுக்கு, அவன் எங்கும் இல்லை

மேலும் செய்திகள்