< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
வாரம் ஒரு திருமந்திரம்
|18 Oct 2022 6:52 AM IST
திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
திருமூலரால் இயற்றப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறியையும், அன்பே சிவம் என்பதையும், யோகக் கலைகளையும் இன்னும் பல வாழ்வியல் நெறிகளைப் பற்றியும் பேசுகிறது. அதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
ஈராறு பெண்கலை எண்ணிரண்டு ஆண்கலை
பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தோன்றும் நெருப்பு உறவே பெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்தம் ஆனதே.
விளக்கம்:-
ஆண் கலையாகிய சந்திரனுக்குரிய பதினாறும், பெண் கலையாகிய சூரியனுக்குரிய பன்னிரண்டும், மூச்சுப் பயிற்சியால் உடம்பில் இருந்து நீங்காமல், மூலாதாரத்தில் நிற்க வேண்டும். அவ்வாறு நின்றால் பேரானந்தமாகிய திருவடி இன்பம் தோன்றும்.