வாரம் ஒரு திருமந்திரம்
|திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
திருமந்திரத்திற்கு 'மூவாயிரம் பாடல்' என்ற பெயரும் உண்டு. திருமூலர் வருடத்திற்கு ஒரு பாடல் என்று மூவாயிரம் ஆண்டுகளாக திருமந்திரத்தில் தொகுக்கப்பட்ட மூவாயிரம் பாடல்களையும் பாடியிருக்கிறார். சைவ நெறியையும், சிவபெருமானின் சிறப்பையும் எடுத்துரைக்கும் இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
பாருக்குக் கீழே பகலோன் வரும் வழி
யாருக்கும் காண ஒண்ணாத அரும்பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.
விளக்கம்:-
இந்த மண்ணுலகத்தின் கீழ் இருந்து சூரியன் உதிக்கின்றான். அவன் வரும் வழியை, இறைவனின் திருவருள் பெற்றவர்களால் மட்டுமே உணர்ந்து புரிந்துகொள்ள முடியும். அந்த சூரியனின் ஒளி, நீருக்கும், நெருப்புக்கும் இடையே உதிப்பது. யாராலும் நெருங்கிச் செல்ல முடியாதது. அத்தகைய சூரியன், சிவபெருமானின் பஞ்சபூத வடிவங்களில் ஒன்றாகும்.