< Back
ஆன்மிகம்
வாரம் ஒரு திருமந்திரம்
ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

தினத்தந்தி
|
16 Aug 2022 7:06 AM IST

திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

மூவாயிரம் பாடல்களால் அமைந்த திருமந்திர நூலில் இல்லாத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம். அவ்வளவு அற்புத விஷயங்கள் அதில் உள்ளன. சைவத்தைப் போற்றும் அதே நேரத்தில், மெய்யறிவைப் பற்றியும் திருமந்திரம் பேசுகிறது. இதை இயற்றிய திருமூலர் எத்தகைய சிந்தனை திறன் கொண்டவராக இருந்திருக்க வேண்டும் என்பது வியப்புக்குரியது. சிறப்புமிக்க அந்த திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

அறிவரும் ஞானத்து எவரும் அறியார்

பொறிவழி தேடிப் புலம்புகின்றார்கள்

நெறி மனையுள்ளே நிலைபெற நோக்கில்

எறி மணியுள்ளே இருக்கலும் ஆமே.

விளக்கம்:-

அறிதற்கு அரிய ஞானத்தின் துணை கொண்டு இறைவனை எவருமே அறிய முயல்வதில்லை. மாறாக ஐம்பொறிகளின் வழியே தேடி அலைந்து அல்லல்படுகின்றனர்.

இறைவனை முறையாக சிந்தைக்குள் இருத்தி, அக தரிசனத்தால் காண்பவர்களுக்கு, கண்ணின் மணி போல சிவபெருமான் எப்போதும் உடன் இருப்பார்.

மேலும் செய்திகள்