< Back
ஆன்மிகம்
வாரம் ஒரு திருமந்திரம்
ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

தினத்தந்தி
|
5 July 2022 7:42 AM IST

திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

அணுவின் இயக்கம் பற்றியும், இறைவனே அணுவாக இருப்பது பற்றியும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தன்னுடைய பாடல்களில் கூறியிருக்கிறார் திருமூலர். இவர் இயற்றிய திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.


பாடல்:-

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

விளக்கம்:- அணுவிற்குள் அணுவாகவும், அதற்கு அப்பாலும் இருப்பவர் இறைவன். அப்படி அணுவிற்குள் அணுவாய் உள்ளதை ஆயிரம் கூறு செய்து, அந்த ஆயிரத்தில் ஒரு கூறினை நெருங்கும் வல்லமை கொண்டவர்களுக்கு, அணுவிற்குள் அணுவாய் இருக்கின்ற இறைவனையும் அணுக முடியும்.

(உயிர் என்று சொல்லப்படும் ஆன்மாவை, ஆயிரம் கூறுகளாக்கி கிடைப்பது இறைவனின் வடிவம் என்கிறார் திருமூலர்)

மேலும் செய்திகள்