< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
கருப்பசாமிக்கு 720 கிலோவில் வினோத காணிக்கை வழங்கிய பக்தர்
|29 April 2024 2:45 PM IST
ஓசூரில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு பக்தர் ஒருவர் 45 அடி உயரம் கொண்ட பிரமாண்ட அரிவாளை காணிக்கையாக வழங்கி உள்ளார்.
ஓசூர்,
ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு பக்தர் ஒருவர், 720 கிலோ எடையுடன் 45 அடி உயரம் கொண்ட பிரமாண்ட அரிவாளை காணிக்கையாக வழங்கி உள்ளார். பூனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர், தனது வேண்டுதல் நிறைவேறியதால், இந்த பிரமாண்ட அரிவாளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தி உள்ளார்.
இதற்காக கோவில் முன்பு அமைக்கப்பட்ட பிரத்யேக பீடத்தில், கிரேன் மூலம் அரிவாள் தூக்கி வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.