< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 24-ந்தேதி பவுர்ணமி கருட சேவை
|22 Feb 2024 2:15 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 24-ந்தேதி பவுர்ணமி கருட சேவை நடக்கிறது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்கக் கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடக்கும். அதில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதன்படி வருகிற 24-ந்தேதி பவுர்ணமி கருட சேவை நடக்கிறது. அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வ அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனம் மீது எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
திருப்பதியில் நடைபெறும் மிகவும் விசேஷமான உற்சவங்களில் கருட சேவையும் ஒன்று. இந்த உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.