< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவில் கார் விபத்து.. இந்திய பெண் உயிரிழப்பு
|24 March 2024 2:00 PM IST
விபத்தில் இறந்த பெண்ணின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு தேவையான உதவிகளை இந்திய துணை தூதரகம் செய்கிறது.
நியூயார்க்:
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் கடந்த 21-ம் தேதி நிகழ்ந்த கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த அர்ஷியா ஜோஷி (வயது 21) என்ற பெண் உயிரிழந்தார். இத்தகவலை நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ளது.
இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
பென்சில்வேனியாவில் மார்ச் 21-ம் தேதி நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த அர்ஷியா ஜோஷியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஜோஷியின் குடும்பம் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. அவரது உடலை விரைவில் இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல அனைத்து உதவிகளையும் செய்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.