சுடுவதற்கு முன்பு "நீங்கள் அனைவரும் சாகப்போகிறீர்கள்" என்று கூறினார் - துப்பாக்கிச்சூட்டில் உயிர்பிழைத்த சிறுவன்
|சுடுவதற்கு முன்பு "நீங்கள் அனைவரும் சாகப்போகிறீர்கள்" என்று குற்றவாளி கூறியதாக உவால்டே துப்பாக்கிச்சூட்டில் உயிர்பிழைத்த சிறுவன் கூறியுள்ளார்.
'You are all gonna die,' Texas school shooter told kids before opening fire
சுடுவதற்கு முன்பு "நீங்கள் அனைவரும் சாகப்போகிறீர்கள்" என்று கூறினார் - துப்பாக்கிச்சூட்டில் உயிர்பிழைத்த சிறுவன்
சுடுவதற்கு முன்பு "நீங்கள் அனைவரும் சாகப்போகிறீர்கள்" என்று குற்றவாளி கூறியதாக உவால்டே துப்பாக்கிச்சூட்டில் உயிர்பிழைத்த சிறுவன் கூறியுள்ளார்.
United States, firing, அமெரிக்கா, துப்பாக்கிச்சூடு,உவால்டே,
அமெரிக்காவின் பள்ளிகளில் "ஆக்டிவ் ஷூட்டர் டிரில்ஸ்" என்பது பொதுவானதாகும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் இந்த பாதுகாப்புப் பயிற்சியில் கலந்து கொள்வார்கள். இந்த பயிற்சியின் போது யாராவது துப்பாக்கியுடன் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து விட்டால் அந்த சூழ்நிலையை கையாளுவது குறித்து பயிற்சியளிக்கப்படும்.
கடந்த வாரத்தில் டெக்சாஸ், உவால்டேவில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டபோது, ஆசிரியருக்கு இந்த துப்பாக்கி சத்தம் பயிற்சி இல்லை என்பது புரிந்தது. உடனே அந்த ஆசிரியை, வகுப்பறைக் கதவை அவசரமாகப் பூட்டி, மாணவர்களை மேசையின் கீழ் ஒளிந்து கொள்ளும்படி கூறியதாக செய்தியாளர்களிடம் பெயர் சொல்ல விரும்பாத அந்த ஆசிரியை கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
"இது ஒரு பயிற்சி அல்ல என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் அமைதியாக இருக்க வேண்டும், இல்லையெனில் நாங்கள் இறந்து விடுவோம் என்ற நிலைமையில் இருந்தோம். அருகிலுள்ள அறைகளில் இருந்து காயமடைந்த குழந்தைகளின் அலறல்களை கேட்டோம். அதைக் கேட்டதும் எங்கள் வகுப்பில் இருந்த சில மாணவிகள் அழத் தொடங்கினர். அவர்களை ஆறுதல்படுத்த முயன்றேன். இறுதியாக, போலீசார் வந்து எங்கள் அனைவரையும் வெளியேற்றினர். இது என் வாழ்க்கையின் மோசமான மிக நீண்ட 35 நிமிடங்கள்" என்று கூறினார்.
அவருடைய வகுப்பறையில் இருந்த அனைவரும் காயமடையாமல் தப்பிச் சென்றாலும், மற்றவர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. துப்பபாக்கிச் சூடு நடத்தப்பட்ட வகுப்பறையில் இருந்த சாமுவேல் சலினாஸ் (வயது 10) கூறும்போது, "துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு அந்த நபர், நீங்கள் அனைவரும் இறக்கப் போகிறீர்கள் என்று கூறினார். அதன்பிறகு என் ஆசிரியரை சுட்டார். அதன்பிறகு குழந்தைகள் மீது சுட்டார். இறுதியாக அவர் என்னை குறி வைத்தார். என்னுடைய காலில் சுட்டார்" என்று கூறினார்.