< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜப்பானில் மழைக்கு நடுவே இந்திய தூதரகத்தில் நடந்த யோகாசன நிகழ்ச்சி
|21 Jun 2024 11:22 AM IST
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மழைக்கு நடுவே இந்திய தூதரகத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.
டோக்கியோ,
யோகாவை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி 10-வது யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் இன்று யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய தூதரகத்தின் சார்பில், அங்குள்ள சுக்ஜி ஹாங்வான்ஜி கோவிலில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி இன்று நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள், ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் ஜப்பான் மக்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது மழை பெய்ய தொடங்கியதால், அங்கு வந்திருந்தவர்கள் குடைகளை பிடித்தவாறு யோகாசனம் செய்தனர்.