< Back
உலக செய்திகள்
ஹமாஸ்-க்கு ஆதரவாக போரில் குதித்த ஏமன்..!
உலக செய்திகள்

ஹமாஸ்-க்கு ஆதரவாக போரில் குதித்த ஏமன்..!

தினத்தந்தி
|
1 Nov 2023 12:41 PM IST

ஏவுகணை தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

காசா முனை,

பாலஸ்தீனத்தின் காசா முனை மீது போர் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பினரும் களம் குதித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர். பாலஸ்தீன வெற்றிக்காக இந்த தாக்குதல் தொடரும் என்று ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏவுகணை தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியதாக கூறியுள்ளனர். இவை அனைத்தும் இஸ்ரேலின் செங்கடல் சுற்றுலாத் தலமான ஈலாட்டை குறி வைத்திருந்தது.

இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு மேலும் கவலையை அதிகரித்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேல் சண்டை செய்து வருகிறது. இப்படி இருக்கையில் தெற்கிலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்தினால் நிலைமை மோசமாகக்கூடும். எனவே உதவிக்கு இஸ்ரேல், அமெரிக்காவை அழைக்க வாய்ப்பிருக்கிறது.

மேலும் செய்திகள்