< Back
உலக செய்திகள்
கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
உலக செய்திகள்

ஏமனில் செங்கடல் வழியாக சென்ற கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

தினத்தந்தி
|
17 July 2024 10:52 PM IST

லைபீரியா மற்றும் பனாமா நாட்டு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர்.

சனா,

இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். இதனால் செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இதனை கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையில் ஒரு கூட்டுப்படை உருவாக்கப்பட்டது.

அவர்கள் செங்கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில் லைபீரியா மற்றும் பனாமா நாட்டு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இங்கிலாந்து கடற்படையினர் தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும் இந்த சம்பவத்தால் அங்கு மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்