< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
வியட்நாம் பிரதமருடன் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு
|14 Dec 2023 6:54 AM IST
வியட்நாம் நாட்டின் கம்யூனிஸ்டு கட்சி பொது செயலாளர் குயென் பூ திரோங்கையும் ஜின்பிங் சந்தித்து பேசினார்.
ஹனோய்,
சீன அதிபர் ஜின்பிங் அரசுமுறை பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். சீனாவை எதிர்க்கும் விதமாக தைவான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இத்தகைய சூழலில் ஜி ஜின்பிங்கின் வியட்நாம் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2 நாள் பயணமாக தன் மனைவியுடன் தனி விமானத்தில் வியட்நாம் சென்ற சீன அதிபர் ஜின்பிங்க்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து வியட்நாம் பிரதமர் பாம் மின் சின்- சீன அதிபர் ஜின்பிங் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இருநாட்டு உறவுகள், பொருளாதாரம் மற்றும் ராணுவ மேம்பாடு குறித்து இந்த பேச்சுவார்த்தையில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
முன்னதாக வியட்நாம் நாட்டின் கம்யூனிஸ்டு கட்சி பொது செயலாளரும் மூத்த அரசியல்வாதியுமான குயென் பூ திரோங்கையும் ஜின்பிங் சந்தித்து பேசியிருந்தார்.