< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
எக்ஸ் சமூக வலைதளம் முடங்கியது...!!
|21 Dec 2023 11:57 AM IST
எக்ஸ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வராத நிலையில் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
வாஷிங்டன்,
பிரபல சமூக வலைதள நிறுவனமான எக்ஸ் ( முன்பு டுவிட்டர்) திடீரென இன்று முடங்கியுள்ளது. பயனாளர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எக்ஸ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வராத நிலையில் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
சமூக வலைதளமான எக்ஸ் கடந்த சில நிமிடங்களாக முடங்கியதால் இணையவாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எக்ஸ் வலைதளம் தற்போது அடிக்கடி இந்த மாதிரியான செயலிழப்பை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.