< Back
உலக செய்திகள்
3 மாத போரில் மோசமான தாக்குதல்; 21 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - இஸ்ரேல் தகவல்

Image Courtesy : AFP

உலக செய்திகள்

3 மாத போரில் மோசமான தாக்குதல்; 21 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - இஸ்ரேல் தகவல்

தினத்தந்தி
|
23 Jan 2024 12:04 PM IST

ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

டெல் அவிவ்,

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி போர் வெடித்தது. கடந்த 3 மாதங்களாக நீடித்து வரும் இந்த போர் காரணமாக காசாவில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிக்கும் வரை போர் தொடர்ந்து நடைபெறும் என இஸ்ரேல் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் வெடிப்பொருட்களை தயார் செய்து கொண்டிருந்தபோது, ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் 21 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 3 மாத போரில் மிகவும் மோசமான தாக்குதல் இது என இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்