< Back
உலக செய்திகள்
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 51.62 கோடி ஆக உயர்வு
உலக செய்திகள்

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 51.62 கோடி ஆக உயர்வு

தினத்தந்தி
|
14 Jun 2022 2:48 AM GMT

உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 54.01 கோடியில் இருந்து 54.10 கோடியாக உயர்ந்து உள்ளது.



வாஷிங்டன்,



சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. உலகம் முழுவதும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. தற்போது கொரோனா வைரசானது 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உருமாறி வரும் வகைகளால் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 கோடியே 10 லட்சத்து 23 ஆயிரத்து 306 ஆக உயர்ந்து உள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 84 லட்சத்து 24 ஆயிரத்து 416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51 கோடியே 62 லட்சத்து 66 ஆயிரத்து 427 பேர் குணமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை நேற்று 51 கோடியே 57 லட்சத்து 75 ஆயிரத்து 389 ஆக இருந்தது. எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 32 ஆயிரத்து 463 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்