< Back
உலக செய்திகள்
பிலிப்பைன்ஸ் கடலுக்கு அடியில் 23 ஆயிரம் அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் கடலுக்கு அடியில் 23 ஆயிரம் அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது!

தினத்தந்தி
|
19 July 2022 3:21 PM IST

உலகில் நடைபெற்ற மிக ஆழமான கப்பல் விபத்து என்ற கின்னஸ் உலக சாதனையை இந்த விபத்து முறியடித்துள்ளது.

வாஷிங்டன்,

இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் பிலிப்பைன்ஸில் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 7,000 மீட்டர் (23,000 அடி) கீழே கண்டுபிடிக்கப்பட்டது.

பிலிப்பைன்ஸின் மூன்றாவது பெரிய தீவுப்பகுதியான சமர் தீவில், கடலின் மேற்பரப்பிலிருந்து 6,865 மீட்டர் (அதாவது 21,521 அடி) ஆழத்தில் இந்த கப்பல் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

அக்டோபர் 25, 1944 அன்று மத்திய சமர் தீவில் நடந்த போரின் போது அமெரிக்க கடற்படையின் கப்பல் சேதமடைந்தது. இந்த நிலையில், இந்த கப்பல் மூழ்கிய இடம் குறித்த துப்புகளை அடிப்படையாக கொண்டு, கடலுக்கடியில் நீர்மூழ்கிக் கப்பலில் தேடும் பணியில் ஈடுபட்ட குழு ஒன்று இந்த மூழ்கிய கப்பலின் பாகங்களை கண்டுபிடித்துள்ளது.

இந்நிலையில், உலகில் நடைபெற்ற மிக ஆழமான கப்பல் விபத்து என்ற கின்னஸ் உலக சாதனையை இந்த விபத்து முறியடித்துள்ளது. இதனை கின்னஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படை பதிவுகளின்படி, 'ஜான் சி பட்லர்- யு.எஸ்.எஸ் சாமுவேல் பி ராபர்ட்ஸ்' என்பதே இரண்டாம் உலகப் போரின் போது விபத்துக்குள்ளான இந்த கப்பலின் பெயராகும்.

இதற்கு முன்னர் கிட்டத்தட்ட 6,500 மீட்டர் கடல் ஆழத்தில், 2021இல் கண்டுபிடிக்கப்பட்ட யுஎஸ்எஸ் ஜான்ஸ்டன் என்ற கப்பல் விபத்து தான் உலகின் மிக ஆழமான கப்பல் விபத்து என அடையாளம் காணப்பட்டது.

அந்த கப்பலில், இரண்டாம் உலக்ப்போரின் போது பயன்படுத்த கொண்டு செல்லப்பட்ட வெடிமருந்துகள் இன்னும் வெடிக்கும் நிலையில் இருப்பதும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்