< Back
உலக செய்திகள்
இஸ்ரேல்-ஈரான் மோதலால் உலகப்போர் ஏற்படும் அபாயம் - டிரம்ப் எச்சரிக்கை
உலக செய்திகள்

'இஸ்ரேல்-ஈரான் மோதலால் உலகப்போர் ஏற்படும் அபாயம்' - டிரம்ப் எச்சரிக்கை

தினத்தந்தி
|
13 April 2024 6:26 PM IST

அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் 3 முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் விரைவில் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல்-ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம் என்றும், அமெரிக்காவில் நவம்பர் 5-ந்தேதி அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்பாக, அதுவும் குறிப்பாக தற்போது உள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்