< Back
உலக செய்திகள்

உலக செய்திகள்
இங்கிலாந்தில் 2-ம் உலகப்போர் காலத்தைச் சேர்ந்த போர் விமானம் விபத்து - விமானி உயிரிழப்பு

26 May 2024 4:56 PM IST
இங்கிலாந்தில் 2-ம் உலகப்போர் காலத்தைச் சேர்ந்த போர் விமானம் விபத்திற்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.
லண்டன்,
இங்கிலாந்தின் லிங்கன்ஷயர் பகுதியில் உள்ள கானிங்ஸ்பி விமான படைத்தளத்தில், 2-ம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட போர் விமானங்களை ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை விமானிகள் இயக்கி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றைய தினம் 'ஸ்பிட்பயர்' என்ற போர் விமானத்தை இங்கிலாந்து விமானப்படையைச் சேர்ந்த விமானி இயக்கினார். இந்நிலையில், அந்த விமானம் லிங்கன்ஷயர் பகுதியில் உள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.