< Back
உலக செய்திகள்
வறுமையில் வாடும் 9½ கோடி பாகிஸ்தானியர்கள் - உலக வங்கி
உலக செய்திகள்

வறுமையில் வாடும் 9½ கோடி பாகிஸ்தானியர்கள் - உலக வங்கி

தினத்தந்தி
|
23 Sep 2023 7:05 PM GMT

சுமார் 9½ கோடி பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடுகிறார்கள் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்டு மாதம் கலைக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு அதாவது வரும் ஜனவரியில் பொது தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் புதிய தேர்தலுக்கு முன்னதாக பாகிஸ்தானின் அடுத்த அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என வரைவு கொள்கை குறிப்புகளை உலக வங்கி வெளியிட்டு உள்ளது. உலக வங்கி தனது குறிப்புகளில் பாகிஸ்தானின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் உள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கடந்த நிதியாண்டில் பாகிஸ்தானில் வறுமை ஒரு வருடத்திற்குள் 34.2 சதவீதத்தில் இருந்து 39.4 சதவீதமாக உயர்ந்து உள்ளது. 1¼ கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர். சுமார் 9½ கோடி பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடுகிறார்கள். விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் மீது வரி விதிக்க அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடையும் முயற்சியில் வீணான செலவினங்களைக் குறைக்க வேண்டும் என உலக வங்கி கேட்டுக்கொண்டு உள்ளது.

மேலும் செய்திகள்