< Back
உலக செய்திகள்
கழிவறையை அதிக முறை பயன்படுத்தியதால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் பயணி
உலக செய்திகள்

கழிவறையை அதிக முறை பயன்படுத்தியதால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் பயணி

தினத்தந்தி
|
17 Feb 2024 3:10 PM IST

இந்த சம்பவம் குறித்து ஜோனா சியு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மெக்சிகோ சிட்டி,

ஜோனா சியு என்ற பெண் மெக்சிகோவில் இருந்து புறப்படும் வெஸ்ட் ஜெட் விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். விமானம் புறப்படுவதற்கு முன்பு ஜோனாவிற்கு வயிற்று பிரச்சினை இருந்ததால் அவர் விமான கழிவறையை அதிக முறை பயன்படுத்தியுள்ளார். இதனால் விமான ஊழியர்கள் ஜோனாவை விமானத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஜோனா சியு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வெஸ்ட் ஜெட் விமானத்தில் இருந்து அவசர அவசரமாக என்னை வெளியேற்றினர். எனது நண்பரிடம் தான் கொடுத்து வைத்திருந்த பணத்தை எல்லாம் ஊழியர்களிடம் வித்ததாகவும், விமான நிலையத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஓட்டலுக்கு தனது டாக்ஸி கட்டணத்தை வெஸ்ட் ஜெட் மேற்பார்வையாளர் வழங்க மறுத்ததாகவும், மேலும் வீடியோ எடுத்ததை அழிக்காவிட்டால் நாளை விமானத்தில் பயணிக்க இயலாது எனவும் மிரட்டினார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பலர் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அதில் ஜோனாவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்