< Back
உலக செய்திகள்
தில்லுமுல்லு செய்து ஓட்டலில் ரீபண்ட் பெற்ற பெண்... சி.சி.டி.வி. காட்சியை பார்த்து ஷாக் ஆன உரிமையாளர்
உலக செய்திகள்

தில்லுமுல்லு செய்து ஓட்டலில் ரீபண்ட் பெற்ற பெண்... சி.சி.டி.வி. காட்சியை பார்த்து ஷாக் ஆன உரிமையாளர்

தினத்தந்தி
|
15 Nov 2023 6:05 PM IST

ஒட்டல் உரிமையாளர் சி.சி.டி.வி. பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, மற்ற ஓட்டல் உரிமையாளர்கள் உஷாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

லண்டன்:

இங்கிலாந்தில் உள்ள ஒரு ஓட்டலில் ஓசியில் சாப்பிடுவதற்காக பெண் ஒருவர் செய்த தில்லுமுல்லு, அங்கிருந்த சி.சி.டி.வி. மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

இங்கிலாந்தின் பிளாக்பர்ன் நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாப்பிட வந்துள்ளார். தனக்கான உணவை ஆர்டர் செய்து சாப்பிடத் தொடங்கினார். கிட்டத்தட்ட சாப்பிட்டு முடிக்கும்போது திடீரென எழுந்து தனது உணவில் முடி கிடப்பதாக கூறி ஓட்டல் உரிமையாளரிடம் ஆதாரத்துடன் புகார் தெரிவித்தார். இதனால், வேறு வழியில்லாமல் அந்த பெண்ணின் உணவுக்கான பில் தொகையை உரிமையாளர் திருப்பிச் செலுத்தி உள்ளார்.

அதன்பின்னர் ஓட்டல் உரிமையாளர், எங்கு தவறு நடந்தது? என்பதை கண்டறிவதற்காக, சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது, அந்தப் பெண் தனது உணவில் தந்திரமாக தனது தலைமுடியை போட்டது தெரியவந்தது. இதைப் பார்த்து உரிமையாளர் அதிர்ச்சியும் கடும் கோபமும் அடைந்தார்.

பில் தொகையை ரீபண்ட் பெறுவதற்காக அந்த பெண் செய்த தந்திரத்தை அறிந்த ஓட்டல் உரிமையாளர், சி.சி.டி.வி. பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, மற்ற ஓட்டல் உரிமையாளர்கள் உஷாராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பெரும்பாலானோர், அந்த பெண்ணை விமர்சனம் செய்தனர்.

மேலும் செய்திகள்