< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்கமாட்டோம் - தலிபான்
|7 July 2022 3:58 AM IST
பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்தவிடமாட்டோம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
காபுல்,
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான்கள் அரசின் தலைவராக ஹிபெதுல்லா அஹ்ஹண்டஸ்டா செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இஸ்லாமிய மத நிகழ்வுகளில் ஒன்றான ஈத் - அல் - அல்ஹா தொடர்பாக தலிபான் தலைவர் ஹிபெதுல்லா காணொலி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், எங்கள் அண்டை நாட்டினருக்கும், பிராந்தியத்திற்கும் உலகத்திற்கும் நாங்கள் உறுதிமொழி ஒன்றை அளிக்கிறோம். ஆப்கானிஸ்தான் மண்ணியில் இருந்து பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த நாங்கள் யாரையும் அனுமதிக்கமாட்டோம். அதேவேளை, எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என நாங்கள் எதிர்பார்க்கிறோம்' என்றார்.