< Back
உலக செய்திகள்
Will never pardon son Joe BidenImage Courtesy : AFP
உலக செய்திகள்

'குற்ற வழக்கில் சிக்கிய மகனை மன்னிக்கவே மாட்டேன்' - ஜோ பைடன் காட்டம்

தினத்தந்தி
|
8 Jun 2024 10:45 AM IST

குற்ற வழக்கில் சிக்கிய மகனை மன்னிக்கவே மாட்டேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் மீது சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்க முயற்சித்தது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக டெலாவேர் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் முதல் முறையாக அதிபரின் மகன் மீது இத்தகைய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் அந்நாட்டின் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்த வழக்கில் தனது மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கவே மாட்டேன் என உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் கூறுகையில், அமெரிக்க அதிபர் தனது மகனை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த வழக்கு தற்போது கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்