< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
கட்டுக்கடங்காத காட்டுத் தீ...தீக்கிரையான குடியிருப்புகள் - டெக்சாஸில் பரபரப்பு
|26 July 2022 8:11 PM IST
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
டெக்சாஸ்,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் காட்டுத்தீ பரவியதால், குடியிருப்புகள் தீக்கிரையாகின.
டெக்சாஸ் மாகாணத்தில் பால்ச் ஸ்பிரிங் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ, அருகிலுள்ள குடியிருப்புகளுக்கும் பரவியது. இதனால் குடியிருப்புகள் பற்றி எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தன.
குடியிருப்புகள் கொழுந்துவிட்டு எரியும் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.