< Back
உலக செய்திகள்
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காட்டுத்தீ - 5 ஆயிரம் ஏக்கர் எரிந்து நாசம்
உலக செய்திகள்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காட்டுத்தீ - 5 ஆயிரம் ஏக்கர் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
14 Jun 2022 1:39 PM IST

பலத்த காற்று காரணமாக அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பிளாக்ஸாடாஃப் பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் கடந்த வார இறுதியில் பற்றிய காட்டுத்தீ, தொடர்ந்து எரிந்து வருகிறது. மேலும் பலத்த காற்று காரணமாக இந்த தீ வேகமாக பரவி வருகிறது.

அங்கு நெருப்பு பரவி வரும் பகுதிகளில் இருந்து இதுவரை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை 5 ஆயிரம் ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோடைக்காலத்தில் ஏற்படும் கடுமையான வெப்பம் காரணமாக இந்த தீ ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், பலத்த காற்று காரணமாக தீயணைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்