< Back
உலக செய்திகள்
சித்து மூஸ்வாலாவை கொலை செய்தது ஏன்...? கோல்டி பிரார் விளக்கம்
உலக செய்திகள்

சித்து மூஸ்வாலாவை கொலை செய்தது ஏன்...? கோல்டி பிரார் விளக்கம்

தினத்தந்தி
|
26 Jun 2023 8:40 PM IST

பிரபல பஞ்சாப் இளம் பாடகர் சித்து மூஸ்வாலாவை கொலை செய்தது ஏன்...? என்பது பற்றி கோல்டி பிரார் விளக்கம் அளித்து உள்ளார்.

டொரண்டோ,

பஞ்சாப் பாடகர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான சித்து மூஸ்வாலா கடந்த 2022-ம் ஆண்டு மே 29-ந்தேதி மர்ம நபர்களால் மன்சா மாவட்டத்தில் தனது ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பரபரப்பு ஏற்படுத்தியது.

அவர் படுகொல செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே அவருக்கு வழங்கப்பட்டு இருந்த அரசு பாதுகாப்பு நீக்கப்பட்டு இருந்தது. இதன்பின்னர் இந்த கொலை சம்பவத்துக்கு கனடாவை சேர்ந்த கூலிப்படை தலைவரான கோல்டி பிரார் பொறுப்பேற்றார்.

அவர் கனடாவில் வசிக்கிறார் என நம்பப்படுகிறது. இந்த சூழலில், அந்நாட்டு பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பார் என்று கருதப்படுகிறது. இதனால் கனடாவின் அதிகம் தேடப்படும் டாப் 25 நபர்களின் பட்டியலில் கடந்த மாதத்தில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், சித்து மூஸ்வாலாவை நானே கொலை செய்தேன் என பிரார் அதிர்ச்சியூட்டும் வகையில் உண்மையை கூறியுள்ளார்.

இதனை நாங்கள் முன்பே உறுதிப்படுத்தி இருக்கிறோம். நாங்கள் மறைக்க கூடிய விசயங்களை செய்வதில்லை. நாங்கள் செய்த விசயங்களை ஒப்பு கொள்வதில் நாங்கள் எந்த தீங்கு தரும் விசயங்களையும் காண்பதில்லை. நிறைய யோசித்த பின்னரே செயலில் இறங்கினோம் என பிரார் கூறியுள்ளார்.

சித்து மூஸ்வாலா ஈகோ பிடித்த நபர். அவர் தனது அரசியல் மற்றும் பணஅதிகாரங்களை தவறாக பயன்படுத்தினார். அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டியது அவசியம். அதனால், அவருக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட்டது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்