< Back
உலக செய்திகள்
குரங்கு அம்மை நோய் பரவலை பொதுசுகாதார அவசரநிலையாக அறிவிக்க உலக சுகாதார நிறுவனம்  முக்கிய ஆலோசனை
உலக செய்திகள்

குரங்கு அம்மை நோய் பரவலை பொதுசுகாதார அவசரநிலையாக அறிவிக்க உலக சுகாதார நிறுவனம் முக்கிய ஆலோசனை

தினத்தந்தி
|
14 Jun 2022 3:49 PM GMT

குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் தொடர்பாக அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெனீவா,

குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் தொடர்பாக, ஜூன் 23 அன்று அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோய் தொற்றானது, சர்வதேச அளவில், கொரோனா போன்று பொதுசுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், "குரங்கு நோய் பரவுவது அசாதாரணமானது மற்றும் கவலைக்குரியது. இதன் பாதிப்பு சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையை பிரதிபலிக்கிறதா என்பதை மதிப்பிடுவதற்கு சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ் அவசர கமிட்டியை கூட்ட முடிவு செய்துள்ளேன்" என்றார்.

மேலும் செய்திகள்