< Back
உலக செய்திகள்
சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டிப்பு
உலக செய்திகள்

சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டிப்பு

தினத்தந்தி
|
18 March 2023 11:41 PM IST

கொரோனா பெருந்தொற்று தரவுகளை பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தலைவர் கூறினார்.

கொரோனா பெருந்தொற்று தனது நாட்டில் வெளிப்பட்டது தொடர்பான தரவுகளை சீனா தொடர்ந்து மறைத்து வருவதாக குற்றச்சாட்டு நீடிக்கிறது.

கொரோனாவின் ஆரம்ப காலத்தில், உகான் நகரத்தில் ஹுவானன் சந்தைதான், தொற்றின் மையமாக விளங்கியது. ஆனால் அங்கிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்புள்ள தரவுகளை சீனா வெளிப்படையாக வெளியிடவில்லை. இதை உலக சுகாதார அமைப்பு கண்டித்துள்ளது.

இதுபற்றி அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான ஒவ்வொரு தரவுகளும் உடனடியாக சர்வதேச சமூகத்துடன் பகிரப்பட வேண்டும். இந்தத் தரவுகள் 3 ஆண்டுகளுக்கு முன்பே பகிரப்பட்டிருக்க வேண்டும். தரவுகளை பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்