< Back
உலக செய்திகள்
பக்ரீத் தொழுகையின் போது குரான் எரிப்பு போராட்டம்;அனுமதி கொடுத்த சுவீடன் ; துருக்கி கண்டனம்
உலக செய்திகள்

பக்ரீத் தொழுகையின் போது குரான் எரிப்பு போராட்டம்;அனுமதி கொடுத்த சுவீடன் ; துருக்கி கண்டனம்

தினத்தந்தி
|
29 Jun 2023 3:35 PM IST

சல்வான் ஈராக்கில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு சுவீடனுக்கு தப்பிச் சென்று ஸ்டாக்ஹோம் கவுண்டியில் உள்ள சோடெர்டால்ஜியில் உள்ள ஜெர்னா நகராட்சியில் வசித்து வந்தார்.

ஸ்டாக்ஹோம்

உலகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் மசூதியில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது மசூதிக்கு வெளியே ஒரு போராட்டம் வெடித்தது. அங்கு சல்வான் மோமிகா(37) என்று ஈராக்கிய அகதி புனித குர்ஆனின் சில பக்கங்களை எரித்து உள்ளார். மேலும் புனித நூலை அவமதித்து உள்ளார்.

சல்வான் ஈராக்கில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு சுவீடனுக்கு தப்பிச் சென்று ஸ்டாக்ஹோம் கவுண்டியில் உள்ள சோடெர்டால்ஜியில் உள்ள ஜெர்னா நகராட்சியில் வசித்து வந்தார்.

போராட்டத்திற்கு முன் அவர் தனது சமூக வலைதளத்தில்

எனது ஆர்ப்பாட்டம் பக்ரீத் அன்று நடைபெறும். எனது ஆர்ப்பாட்டம் ஸ்டாக்ஹோமில் உள்ள பெரிய மசூதிக்கு முன்னால் நடைபெறும். அங்கு நான் குர்ஆனை எரிப்பேன். ஸ்டாக்ஹோமில் வசிக்கும் எனது அன்புக்குரியவர்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று, நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பங்களிக்க விரும்புகிறேன் என அவர் கூறி இருந்தார்.

சல்வானின் ஆர்ப்பாட்டத்திற்கு புதன்கிழமை உள்ளூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஸ்டாக்ஹோமில் குரான் எரிப்புக்கு காவல்துறை அனுமதி மறுத்து இருந்தது.

ஸ்டாக்ஹோம் மசூதிக்கு வெளியே குர்ஆன் எரிப்பு ஆர்ப்பாட்டத்தை அங்கீகரிப்பதற்கான சுவீடன் அதிகாரிகளின் முடிவிற்கு துருக்கி கண்டனம் தெரிவித்து உள்ளது.துருக்கியின் வெளியுறவு மந்திரி இந்த போராட்டத்தை "கொடூரமான செயல்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்