பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்: அமெரிக்கா கருத்து
|பிரதமர் மோடி போலந்தில் இருந்து 7 மணி நேர ரெயில் பயணத்திற்கு பிறகு உக்ரைன் சென்றடைந்தார்.
வாஷிங்டன்,
பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக போலாந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். போலந்தில் இருந்து 7 மணி நேர ரெயில் பயணத்திற்கு பிறகு பிரதமர் மோடி நேற்று ( ஆக.,23) உக்ரைன் சென்றடைந்தார். உக்ரைன் சென்றடைந்த அவர் , அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை தலைநகர் கீவ்நகரில் சந்தித்து பேசினார்.
ரஷியா -உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிபர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி வெளியிட்டுள்ளதாவது:-
மோடியின் உக்ரைன் பயணத்தின் மூலம் இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை உயர்த்துவதில் பரஸ்பர ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ரஷிய -உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் செயல்பட முடிந்தால் உதவியாக இருக்கும் என கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.