< Back
உலக செய்திகள்
புதிய அப்டேட் வெளியிட்ட மெட்டா - வாட்ஸ் அப் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்

Image Courtesy : AFP 

உலக செய்திகள்

புதிய அப்டேட் வெளியிட்ட மெட்டா - வாட்ஸ் அப் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்

தினத்தந்தி
|
16 Jun 2022 9:42 AM GMT

வாட்ஸ் அப் குறித்த புதிய அப்டேட் ஒன்றை மார்க் ஜூக்கர்பெர்க் வெளியிட்டுள்ளார்.

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் வாட்ஸ்-அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்-அப்-பில் அவ்வப்போது பல புதிய அப்டேட்கள் வெளியாவது வழக்கம். இந்த நிலையில் வாட்ஸ் அப் குறித்த புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் வெளியிட்டுள்ளார்.

ஆண்ட்ராய்டு போனிலிருந்து ஐபோனுக்கு மாறும் பயனர்களின் தொடர் கோரிக்கைகளுக்கு பிறகு, வாட்ஸ் அப் மெசேஜ் ஹிஸ்டரியை, ஆண்ட்ராய்டு சாதனங்களிலிருந்து ஐபோன்களுக்கு மாற்றும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மார்க் தனது பேஸ்புக் பக்கத்தில் வாட்ஸ் அப் குறித்து நீண்ட நாட்களாக பயனர்கள் கேட்ட இந்த வந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அதாவது வாட்ஸ் அப் மெசேஜ் ஹிஸ்டரியை மாற்ற ஆண்ட்ராய்டு 5 இயங்குதளத்தையும், ஐபோனில் iOS 15.5 இயங்குதளத்தையும் வைத்திருக்க வேண்டும். ஆண்ட்ராய்டு போனில் "Move to iOS" செயலியை பயன்படுத்தி இந்த வசதியை பெற்று கொள்ளலாம்.

கடந்த வாரம் ஒரே வாட்ஸ் அப் குரூப்பில் 512 உறுப்பினர்களை சேர்க்கும் வசதியையும், 2ஜிபி வரையிலான போட்டோ, வீடியோ போன்றவற்றையும் பகிரும் வசதியும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து அசத்தல் அறிவிப்புகள் வெளியாகியுள்ளதால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்