< Back
உலக செய்திகள்
பயனாளர்கள் தங்களுக்கு மெசேஜ் அனுப்பும் வசதி - புதிய அப்டேட் குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் பரிசோதனை
உலக செய்திகள்

பயனாளர்கள் தங்களுக்கு மெசேஜ் அனுப்பும் வசதி - புதிய அப்டேட் குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் பரிசோதனை

தினத்தந்தி
|
2 Nov 2022 3:11 PM IST

பயனாளர்கள் தங்களுக்கே மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் வசதி குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் பரிசோதனை செய்து வருகிறது.

கலிபோர்னியா,

வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது பயனாளர்களின் தனி உரிமையை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சங்களை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் பயனாளர்கள் தங்களுக்கே மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் வசதி குறித்து பரிசோதனை செய்து வருகிறது.

பயனாளர்கள் தங்களுக்கே மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் வசதி குறிப்பிட்ட ஐ.ஒ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. தகவல்களை சேமிக்க உதவும் இந்த வசதியை, விரைவில் அனைவரும் பெறும் வகையில் வாட்ஸ் நிறுவனம் புதிய அப்டேட்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்