< Back
உலக செய்திகள்
குஜராத் கலவரம் தொடர்பான பி.பி.சி. ஆவணப்படம் குறித்து அமெரிக்கா கருத்து
உலக செய்திகள்

குஜராத் கலவரம் தொடர்பான பி.பி.சி. ஆவணப்படம் குறித்து அமெரிக்கா கருத்து

தினத்தந்தி
|
24 Jan 2023 5:06 AM GMT

பி.பி.சி. ஆவணப்படம் பற்றி தனக்கு தெரியாது என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

பிரதமர் மோடி குஜராத்தின் முதல்-மந்திரியாக இருந்தபோது, அங்கு கடந்த 2002-ம் ஆண்டு மிகப்பெரிய கலவரம் மூண்டது. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள்.

இந்த கலவரம் தொடர்பாக லண்டன் பி.பி.சி. செய்தி நிறுவனம் 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற தலைப்பில் ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, அவரிடம் பி.பி.சி. ஆவணப்படம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த போது அவர் கூறியதாவது;-

"நீங்கள் சுட்டிக்காட்டும் இந்த ஆவணப்படம் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நான் விரிவாகச் சொல்வேன், நமது இந்திய தரப்புடன் நாம் கொண்டுள்ள உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மைக்கு அடித்தளமாக பல விஷயங்கள் உள்ளன.

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நெருங்கிய அரசியல் உறவுகள் உள்ளன, பொருளாதார உறவுகள் உள்ளன, மேலும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான ஒற்றுமை உணர்வுகளும் உள்ளன. அமெரிக்க ஜனநாயகத்திற்கும் இந்திய ஜனநாயகத்திற்கும் இடையே உள்ள பொதுவான மதிப்புகளை நாம் பகிர்ந்து கொண்டுள்ளோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்