< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
"அதிகபட்ச ராஜாங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
|23 May 2022 2:54 PM IST
அதிகபட்ச ராஜாங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கீவ்,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 மாதங்களை எட்ட உள்ளது. ஆனாலும், ரஷியா ராணுவத்துக்கு எதிராக உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அதிகபட்ச ராஜாங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பேசியதாகவும் உக்ரனைலிருந்து விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதையும் மற்றும் எரிபொருள் இறக்குமதி செய்வதையும் அதிகரிக்க முயற்சி செய்வதாக அவர் தெரிவித்தார்.
மேலும் துறைமுக நகரமான ஒடெசாவை ரஷியப் படைகள் முடக்கியுள்ளது குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.