< Back
உலக செய்திகள்
ரஷிய அதிபருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் படைத்தலைவர் விமான விபத்தில் பலி..?

கோப்புப்படம்

உலக செய்திகள்

ரஷிய அதிபருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் படைத்தலைவர் விமான விபத்தில் பலி..?

தினத்தந்தி
|
23 Aug 2023 11:42 PM IST

10 பேர் சென்ற ஜெட் விமானத்தில் வாக்னர் படைத்தலைவர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மாஸ்கோ,

உக்ரைன் மீதான போரில் ரஷியாவுடன் இணைந்து வாக்னர் குழு என்ற தனியார் படை செயல்பட்டு வந்தது. பாக்மத் நகரை கைப்பற்றியது உள்ளிட்ட சண்டைகளில் இப்படை முக்கிய பங்காற்றியது.

இந்த சூழலில் உக்ரைன் போரில் திடீர் திருப்பமாக, ரஷியாவின் முக்கிய நகரங்களை வாக்னர் படை கைப்பற்றி அந்நாட்டு அதிபர் புதினுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஒரு கட்டத்தில் தலைநகர் மாஸ்கோ நோக்கி வாக்னர் படை முன்னேறியதால் பதற்றம் நிலவியது. பின்னர் வாக்னர் படையுடன் பெலராஸ் ஏற்பாட்டில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் கிளர்ச்சியை கைவிட்டார். பின்னர் பெலாரசுக்கு பிரிகோஜின் நாடு கடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் உள்பட 10 பேர் விமான விபத்தில் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் பிரிகோஜின் அந்த விமானத்தில் பயணம் செய்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே விமான பயணிகள் பட்டியலில் பிரிகோஜின் பெயர் உள்ளதாகவும், ஆனால் உயிரிழந்தவர்களில் பிரிகோஜின் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்