< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
உக்ரைனுக்கு எதிராக ரஷிய அதிபர் புதின் அணு ஆயுதங்களை பயன்படுத்துவார் - உக்ரைன் அதிபர்
|26 Sept 2022 3:33 PM IST
உக்ரைனுக்கு எதிராக ரஷிய அதிபர் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கீவ்,
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று தான் நம்புவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
ரஷியாவைப் பாதுகாக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அந்நாட்டு ராணுவம் தயாராக இருக்கும்.ஆகவே இந்த விஷயத்தை பொறுத்தவரை, புதின் மழுப்பவில்லை. உக்ரைன் மீது ரஷியா நிஜமாகவே அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும்.
ரஷியாவையும் அதன் மக்களையும் பாதுகாக்க அவர்கள் கிடைக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவார்கள். உக்ரைனில் ஜாபோரிஜியா அணு ஆலையை கைப்பற்றிய ரஷிய படைகள் அணுஆயுத தாக்குதல் நடத்தவிருப்பதாக கடந்த காலங்களில் மிரட்டியது. இந்நிலையில் எதிர்காலத்தில் நிஜமாகவே அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.