< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வோடபோன்
|17 May 2023 7:23 AM IST
வோடபோன் நிறுவனம், தனது 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
லண்டன்,
கொரோனா தொற்று மற்றும் உக்ரைன்-ரஷியா போரின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் பல தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான மார்கெரிட்டா டெல்லா வால்லே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.