< Back
உலக செய்திகள்
ரஷிய அதிபர் புதினுக்கு புற்றுநோய்; அதிகபட்சம் 3 ஆண்டுகள் உயிருடன் இருப்பார்: உளவுத்துறை தகவல் வெளியே கசிந்ததால் பரபரப்பு!
உலக செய்திகள்

ரஷிய அதிபர் புதினுக்கு புற்றுநோய்; அதிகபட்சம் 3 ஆண்டுகள் உயிருடன் இருப்பார்: உளவுத்துறை தகவல் வெளியே கசிந்ததால் பரபரப்பு!

தினத்தந்தி
|
30 May 2022 4:02 PM GMT

ரஷிய உளவாளியிடமிருந்து அனுப்பப்பட்ட ரகசிய செய்தி வெளியே கசிந்தது.

மாஸ்கோ,

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு புற்று நோய் தீவிரமடைந்து வருவதால், அவரால் அதிகபட்சமாக இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை மட்டுமே வாழ வாய்ப்புள்ளதாக மருத்துவர்களிடமிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

ரஷிய உளவுத்துறை மூலம் வெளிப்படுத்தப்பட்ட அறிக்கைகளின்படி, ரஷிய அதிபர் புதினுக்கு அவருடைய மருத்துவர்கள் 3 ஆண்டுகள் காலக்கெடுவை விதித்திருக்கின்றனர்.


ரஷிய பாதுகாப்பு சேவையில் பணியாற்றி அதில் இருந்து விலகிய போரிஸ் கார்பிச்கோவ் இப்போது பிரிட்டனில் புதினின் கொலையாளிகளிடம் இருந்து மறைந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், ரஷிய உளவாளியிடமிருந்து அவருக்கு அனுப்பப்பட்ட ரகசிய செய்தி வெளியே கசிந்தது.

அதில், "புதினின் கண் பார்வை இப்போது குறைந்தாலும், அவர் கண்ணாடி அணிவதில்லை. அவ்வாறு செய்வதை பலவீனமாக அவர் கருதுகிறார். அவரை சூழ்ந்து சிலர் எப்போதும் அவருடன் இருப்பார்கள். ஆனால், இப்போது அவர்களை அவர் தவிர்த்துவிட்டார். அவருக்கு அடிக்கடி கோபம் ஏற்படுகிறது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலவில்லை. அவர் முற்றிலும் முட்டாள்தனமாகிவிட்டார், கிட்டத்தட்ட யாரையும் நம்பவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.


இது குறித்து ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அதிகாரி கூறுகையில், "69 வயதான ரஷிய அதிபர் புதினுக்கு வேகமாக வளர்ந்துவரும் புற்றுநோய் கடுமையாக தாக்கி உள்ளது.

அதிபர் புதின் தனது கண்பார்வையையும் இழந்து வருகிறார். அவர் உயிருடன் இருக்க இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேல் வாய்ப்பு இல்லை.அவரது கண்பார்வை கடுமையாக மோசமடைந்து வருகிறது. மேலும் அவரது கைகால்களும் இப்போது கட்டுக்கடங்காமல் நடுங்குகின்றன.

அவர் தொலைக்காட்சியில் தோன்றும்போது, வாசிக்க காகிதத்தில் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்ட வாக்கியங்கள் தேவைப்படுகின்றன. அவர் தலைவலியால் அவதிப்படுகிறார் என்று எங்களிடம் கூறப்பட்டது" என்றார்.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில், புதினின் வயிற்றில் இருந்து திரவத்தை அகற்ற அறுவை சிகிச்சை செய்ததாக ஒரு அறிக்கை கூறுகிறது.கடந்த வாரம் சோச்சியில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை புதின் சந்தித்தார். அந்த நிகழ்வின் போது கூட, புதின் தனது கால்களை மோசமாக அசைப்பது கேமராவில் பதிவாகியது.

உக்ரேனிய உளவாளியான கைரிலோ புடானோவ் கூறுகையில், "அவருக்கு (விளாடிமிர் புதின்) பல கடுமையான நோய்கள் உள்ளன, அவற்றில் ஒன்று புற்றுநோய்" என்றார்.


ரஷிய அதிபர் புதினின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வருவதாக வதந்திகள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இந்த வதந்திகளை மறுத்துள்ளார்.

மேலும் செய்திகள்