< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இந்த நாடுகளில் இருந்து சீனா செல்ல விசா தேவையில்லை - வெளியான அறிவிப்பு
|25 Nov 2023 7:08 PM IST
விசா இல்லாமல் சீனா வருபவர்கள் 15 நாட்கள் வரை தங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்,
சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளைக் கவரவும் சீனா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய 6 நாடுகளுக்கு சீனா அனுமதி அளித்துள்ளது...
அதன்படி ,வரும் டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாட்டு மக்களும் விசா இன்றி தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என சீனா அறிவித்துள்ளது. சோதனை முயற்சியாக 1 வருட காலத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசா இல்லாமல் சீனா வருபவர்கள் 15 நாட்கள் வரை தங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.