ஓடும் ஆற்றில் முதலையை பாய்ந்து பிடித்த சிறுத்த புலி...! என்ன ஒரு தில்லு...! சமூக தளவாசிகளை கவர்ந்த வைரல் வீடியோ...!
|காட்டில் விலங்குகள் உயிர்வாழ தனக்கு தேவையானதை வேட்டையாடி உட்கொள்வது வழக்கம் .
வாஷிங்டன்,
காட்டில் விலங்குகள் உயிர்வாழ தனக்கு தேவையானதை வேட்டையாடி உட்கொள்வது வழக்கம் . அதேபோல் இங்கு சிறுத்த புலி ஒன்று ஆற்றின் கரையில் இருந்து தண்ணிரில் சென்றுகொண்டிருந்த முதலையை லாவகமாக வேட்டையாடுவதைக் காணலாம் .அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . டுவிட்டரில் ஃபிகன் என்ற சமூகதளவாசியால் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது, இந்த வீடியோ முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டுவிட்டரில் வஹ்சி ஹயட்லர் என்ற மற்றொரு சமூக தளவாசியால் வெளியிடப்பட்டது, ஆனால் இப்போது வைரலாகி வருகிறது.
" என்ன ஒரு வலிமை," என்று தலைப்பில் பகிரப்பட்டு உள்ளது
இப்போது வைரலாகும் வீடியோவில் , சிறுத்தை தனது உணவை பதுங்கியிருந்து வேட்டையாடும் திறனை கொண்டது . அதேபோன்று இங்கு ஓடும் ஆற்றில் முதலையை பிடிப்பதற்கு முதலில் சிறுத்தை ஆற்றின் அருகே மரக்கிளைகள் மற்றும் புதர்களுக்கு நடுவில் ஒளிந்துகொண்டு நிற்கிறது. தண்ணீரில் மிதக்கும் முதலையின் மீது கவனம் செலுத்தி அருகில் வரும் வரை பொறுமையாக காத்திருந்து முதலை வந்ததும் திடீரென சிறுத்தை முதலையின் மீது பாய்ந்து கபீரென பிடித்து தரையில் தூக்கி வீசுகிறது.
42 வினாடிகள் கொண்ட வீடியோ பதிவு , அதில் கொடூரமான காட்டு விலங்குகள் இரண்டும் உயிர்வாழ்வதற்காக தீவிரமாக போரிடுவதை காணலாம். இருப்பினும் போரில் சிறுத்தை வெற்றி பெறுகிறது, அதன் வாயில் கவ்வியபடி ஆற்றில் இருந்து முதலையின் கழுத்துடன் வெளியேறுகிறது.
இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து 2.6 மில்லியன் பார்வைகளையும் 27,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. சுமார் 4,800 பயனர்கள் இந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்துள்ளனர்.
" சிறுத்த புலி வலிமை அற்புதமானது. அனைத்து பெரிய பூனைகளிலும் வலிமையானது" என்று ஒரு சமூகதள வாசி நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது நபர், "தாடைகள் மற்றும் கழுத்து!! அற்புதம்!"
"அடடா, இரவு உணவுக்கு உண்மையாகவே பசித்திருக்க வேண்டும்" என்று மூன்றாவது பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.