< Back
உலக செய்திகள்
ஈகுவேடார் நாட்டில் அரசின் கொள்கைகளை எதிர்த்து 10 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை
உலக செய்திகள்

ஈகுவேடார் நாட்டில் அரசின் கொள்கைகளை எதிர்த்து 10 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை

தினத்தந்தி
|
23 Jun 2022 3:12 AM IST

ஈகுவேடார் நாட்டின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து, பல்வேறு போரட்டக்குழுக்கள் இணைந்து அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

குவிட்டோ,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவேடாரில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அதியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனை சரிசெய்வதற்கு அந்நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் குல்லெர்மோ லாசோவின் தவறான பொருளாதார கொள்கைகளே இந்த நிலைக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பக தலைநஜர் குவிட்டோவில் நடந்த போராட்டத்தின் போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 2 நபர்கள் உயிரிழந்ததாகவும், 6 போலீசார் தீவிரமாக காயமடைந்துள்ளதாகவும், அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் செய்திகள்