வியட்நாமில் புதிய அதிபர் பதவி ஏற்பு
|ஊழலை எதிர்த்து போராடுவதில் உறுதியாக இருப்பதாக புதிய அதிபர் டோ லாம் கூறியுள்ளார்.
ஹனோய்,
அண்டை நாடான வியட்நாமில் அதிபர் வோ வான் துவோங் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தநிலையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த சம்பவத்தில் அரசு உயர் அதிகாரிகள் உள்பட ஆயிரக்கணக்கானோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. எனவே வியட்நாம் அரசியலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிபர் பதவியில் இருந்து வோ வான் துவோங் விலகினார். இந்தநிலையில் பொது பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த டோ லாம் (வயது 80) புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
வியட்நாமின் பாதுகாப்புத்துறை உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அவர் 2016-ம் ஆண்டு முதல் பொதுபாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் கூறியதாவது:- ஊழலை எதிர்த்து போராடுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஊழல் தடுப்பு குழுவின் துணைத்தலைவராக இருந்த லாம் தனது அரசியல் போட்டியாளர்களை வீழ்த்துவதற்காக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.